PBT

எம்பிஎஸ்ஜே தீபாவளி உபசரிப்பில் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

25 நவம்பர் 2019, 12:39 AM
எம்பிஎஸ்ஜே தீபாவளி உபசரிப்பில் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

பூச்சோங், நவ.25-

தாமான் கின்றாரா, செக்ஸன் 1இல் சுபாங் ஜெயா நகராண்மைக் கழக நிலையிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

“இங்குள்ள இந்திய சமூகத்தினருடன் ஊராட்சி தரப்பினரும் தலைவர்களும் நல்லுறவை மேம்படுத்திக் கொள்வதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்” என்று தொடர்பு பல்லூடக துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

“மேலும் இந்நிகழ்ச்சி பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடுவதற்கும் பிற கலாச்சாரங்கள் குறிப்பாக இந்திய பாரம்பரியத்தின் தனித்தன்மை பற்றி புரிந்து கொள்வதற்கும் ஒரு தடமாகவும் திகழ்கிறது” என்று இந்நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் 17ஆவது வட்டார நகராண்மைக் கழக உறுப்பினர் தோமஸ் லோவ், 20ஆவது வட்டார கழக உறுப்பினர் எஸ்.மோகன், 11ஆவது வட்டார கழக உறுப்பினர் சி. கவிதா மற்றும் 24ஆவது வட்டார கழக உறுப்பினர் எஸ். தமிழரசு ஆகியோரும் கலந்து கொண்டனர். .

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.