NATIONAL

‘மலேசியா @ வேர்க்’ திட்டம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்!

21 நவம்பர் 2019, 6:00 AM
‘மலேசியா @ வேர்க்’ திட்டம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்!

கோலாலம்பூர், நவ.21-

அடுத்த ஐந்தாண்டு கால கட்டத்தில் நாட்டு மக்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்ய ‘மலேசிய எட் வேர்’ (வேலையில் மலேசியா) எனும் திட்டத்திற்காக அரசாங்கம் 6.45 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தத் திட்டம் பல்வேறு வகையான அனுகூலங்களை அடுத்த ஐந்தாண்டு கால கட்டத்தில் ஏற்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

இத்திட்டம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும், மேற்கல்வி மேற்கொள்வதற்கு வாய்ப்புகளை உருவாக்கும், ஒத்துழைப்பு தேவைப்படும் தொடர்புகளையும் ஏற்படுத்தும் என்று மலேசியா @வேர்க் என்ற இயக்கத்தை தொடக்கி வைத்ததோடு அனைத்துலக சமூக வளப்ப மாநாட்டை துவக்கி வைத்து ஆற்றிய உரையில் மகாதீர் தெரிவித்தர்.

வேலையில்லா நிலையை சமாளிக்கவும் எதிர்கொள்ளவும் அனைத்து தரப்பினரும் பங்காற்ற வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இந்நிலையானது அனைத்து நிலையிலான மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் நினைவுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.