NATIONAL

திருமண வயது வரம்பு குறித்த சட்ட மசோதாவை அரசு தயாரித்துள்ளது

19 நவம்பர் 2019, 1:07 AM
திருமண வயது வரம்பு குறித்த சட்ட மசோதாவை அரசு தயாரித்துள்ளது

ஷா ஆலம், நவ.19-

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாக்கிம்) நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச திருமண வயதை 18ஆக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதாவை அரசாங்கம் தயாரித்து வருகிறது. இஸ்லாமிய சட்டம், திருமணம் மற்றும் மாநில சடங்கு ஆகியவை கூட்டரசு சட்டமைப்பின் மாநில பட்டியலின் இரண்டாம் பகுதியின் ஒன்பதாவது பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜீஸா வான் இஸ்மாயில் கூறினார்.

இந்தச் சட்டத் திருத்தத்தை இதுவரை சிலாங்கூர் மாநிலம் மட்டுமே செய்துள்ள வேளையில் ஐந்து மாநிலங்கள் சம்மதமும் எஞ்சிய ஏழு மாநிலங்கள் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.

திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18ஆக நாடு முழுவதிலும் ஒரே சீராக அமல்படுத்துவதற்கு இன்னும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.