NATIONAL

துன் மகாதீர்: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் தோல்வியை பாக்காத்தான் கண்டறியும் !!!

18 நவம்பர் 2019, 10:09 AM
துன் மகாதீர்: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் தோல்வியை பாக்காத்தான்  கண்டறியும் !!!

கோலா லம்பூர், நவம்பர் 18:

ஜோகூர், தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தோல்வியடைத்தற்கான காரணத்தை கண்டறிய, நம்பிக்கைக் கூட்டணி முழுமையான மற்றும் விரிவான ஆய்வை மேற்கொள்ளும்.

எதிர்க்கட்சியின் வெற்றி எதிர்பார்த்த ஒன்று என்றும்,  தஞ்சோங் பியாய் மக்களின் முடிவை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கின்றார்.

எதிர்கட்சியினர், 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தாலும், தேர்தல் முடிவு 15,086 வாக்குகள் பெரும்பான்மை காட்டியதை நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான மகாதீர் சுட்டிக் காட்டினார்.

இந்த இடைத் தேர்தலில், நம்பிக்கை கூட்டணியின் தவறுகள் முழுமையாக ஆராயப்படும் என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி மகாதீர் கூறினார்.

இதனிடையே, பிரச்சாரத்தின்போது கடினமாக உழைத்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.