கோலாலம்பூர், நவ.15-
முதலில் இஸ்லாம் பொருட்கள் வாங்கும் (பிஎம்எஃப்) இயக்கத்தின் காரணமாக பொருட்களின் விலைகளைக் குறைக்க முடிந்ததாகக் கூறப்படும் கூற்றை உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகாரம் அமைச்சு மறுத்தது. பொருட்களின் விலையானது தொழிற்சாலை, தயாரிப்பாளர் மற்றும் சில்லரை வியாபாரிகளின் தேவையின் அடிப்படையில் அமைவது என்பதால் இக்கூற்று அடிப்படையற்றது என்று அமைச்சின் செயலாளர் டத்தோ முவெஸ் அப்துக் அஸிஸ் கூறினார்.
பிஎம்எஃப் காரணமாக பொருட்களின் விலைகள் கடுமையான அளவு குறைந்ததாக தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் சே அப்துல்லா மாட் நாவி கூறியதைத் தொடர்ந்து டத்தோ முவேஸ் மேற்கண்ட விளக்கத்தை அளித்தார்.
குறிப்பிட்ட சில காலங்களில் தங்களின் பொருட்கள் அதிகம் விற்பனையாக வேண்டும் என்ற நோக்கத்தில் தொழிற்சாலை, தயாரிப்பாளர் மற்றும் சில்லரை வர்த்தகர்கள் அப்பொருட்களுக்கு சிறப்பு கழிவு கொடுப்பதுண்டு என்றார் அவர்.


