PBT

சிறார் பராமரிப்பு மையங்கள் மீது எம்பிஎஸ்ஜே அதிரடி சோதனை!

15 நவம்பர் 2019, 4:49 AM
சிறார் பராமரிப்பு மையங்கள் மீது எம்பிஎஸ்ஜே அதிரடி சோதனை!

ஷா ஆலம், நவ.15-

சிறார்களை உடபடுத்தும் கவனக் குறைவு மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க சிறார் பராமரிப்பு, தஸ்கா மற்றும் பாலர் பள்ளி ஆகியவற்றின் மீது சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்ஜே) திடீர் அமலாக்க சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட மையம் முறையாக அனுமதியைப் பெற்றிருப்பது வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுகிறதா என்பது ஆராயப்படும் என்று அக்கழகத்தின் வியூக நிர்வாகம் மற்றும் நிறுவனப் பிரிவு துணை இயக்குநர் அஸ்ஃபாரிஸால் அப்துல் ரஷிட் கூறினார்.

இம்மாதம் வரையிலான பதிவுகளின் அடிப்படையில் இங்கு 99 பராமரிப்பு மையங்கள் மற்றும் 147 தஸ்கா மையங்கள் எம்பிஎஸ்ஜே நிர்வாகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றார் அவர்.

இச்சோதனை நடவடிக்கையின் போது சில மையங்கள் சமூக நல இலாகாவில் பதிந்து கொண்டுள்ள போதிலும் முறையான அங்கீகாரமின்றி நடத்தப்படுவது கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.

எனவே, தனது அமலாக்கத் தரப்பினர் சோதனை நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னதாக, இம்மையங்களை நடத்துவோர் முறையான வர்த்தக அனுமதி மற்றும் பெயர் பலகை போன்றவற்றுக்கான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும்படி அவர் வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.