NATIONAL

அம்னோ- மசீச – பாஸ் ஒத்துழைப்பு ஒரு கபடநாடகம்! - துன் மகாதீர்

14 நவம்பர் 2019, 4:32 AM
அம்னோ- மசீச – பாஸ் ஒத்துழைப்பு ஒரு கபடநாடகம்! - துன் மகாதீர்

பொந்தியான், நவ.15:

மசீச மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையே மத்தியஸ்தராகச் செயல்படும் அம்னோவின் நிலைப்பாடு உண்மையானதல்ல, மாறாக, இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆடும் கபட நாடகமாகும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.

மசீச மற்றும் பாஸ் கட்சி தலைவர்கள் இவ்விரு கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து பேசுவது வேறு, செயல்படுவது வேறாக இருந்து வந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

“”உண்மையானவர்கள் இல்லை. கபடதாரிகள். மலாய்க்காரர்கள் முன்னிலையில் மலாய் போராளிகள் என்பர். இங்கு வந்ததும் மலாய் அல்லாதவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதே இவர்களின் இலக்கு என்று அவர் சாடினார்.

இங்குள்ள அரசு சாரா இயக்கத்தினருடனான விருந்துபசரிப்புக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின் மகாதீர் மேற்கண்டவாறு பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.