NATIONAL

பக்காத்தான் பல்வேறு இனங்களைக் கொண்ட சரிசமமான கட்சி

10 நவம்பர் 2019, 11:31 PM
பக்காத்தான் பல்வேறு இனங்களைக் கொண்ட சரிசமமான கட்சி

பொந்தியான், நவ.11-

நம்பிக்கை கூட்டணியானது பல்வேறு இனத்தவரைக் கொண்ட அரசாங்க நிர்வாகத்தினால் அனைத்து இனங்களையும் சரிசமமாகவும் ஒரே சீராகவும் நடத்தும் ஒரு கூட்டணியாகும்.

14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தது முதல் இக்கூட்டணி நிர்வாகமானது அதன் பங்காளி கட்சிகளான பிகேஆர், பெர்சத்து, ஜசெக மற்றும் அமானா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை நியாயமாகவும் சரிசமாகவும் வழங்கியுள்ளது என்று அதன் தலைமைச் செயலாளர் டத்தோ சைஃபூடின் அப்துல்லா கூறினார்.

எனவே, இதுவே இக்கூட்டணி அனைத்து இனையங்களை மதிப்பதோடு இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பதற்கான ஓர் ஆதாரமாகும் என்றார் அவர்.

பக்காத்தான் ஒரு நியாயமான கட்சி. 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 4 பங்காளி கட்சிகள் வென்ற நாடாளுமன்ற இடங்கள் ஒரே அளவில் இல்லை. குறிப்பாக பிகே ஆர் அதிக இடங்களை வென்றது. அதற்கடுத்த நிலை ஜசெக, மூன்றாவது இடத்தில், நான்காவது அமானா.

இந்நிலையில், மேலவையில் எப்படி சரிசம அளவில் உறுப்பினர்களையில் நியமிப்பது. மக்களவையில் பிகே ஆர் அதிக இடங்களைக் கொண்டுள்ளது. அதனால் அக்கட்சியின் உறுப்பினர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்களை செனட்டராக நியமிக்கவில்லை. மாறாக, ஜசெக, அமானா மற்றும் பெர்சத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்தது என்று தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது சைபூடின் இவ்வாறு பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.