ஷா ஆலம், நவம்பர் 6:
சிலாங்கூர் இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் 5.97 பில்லியன் வெள்ளி மதிப்பிலான முதலீட்டை பதிவு செய்திருப்பதால், அது தனது 2018ஆம் ஆண்டில் புரிந்த சாதனையான 2 இலக்க மதிப்பிலான முதலீட்டை இவ்வாண்டு மீண்டும் புரியலாம் என்று நம்பிக்கை கொண்டுள்ளது.
மாநில அரசு அங்கீகரித்த 132 தொழிற்சாலை திட்டங்களின் பதிவு இந்தத் தகவல் பெறப்பட்டதாக முதலீடு, தொழிற்துறை மற்றும் வர்த்தகம், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
2018ஆம் ஆண்டு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு தொகை, இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
“அரசு பெற்றுள்ள சில திட்டங்கள் பரிந்துரைகள் இன்னும் பரிசீலனையில் இருப்பதால், இவ்வாண்டு இறுதியில் இரண்டு இலக்க தொகையிலான முதலீடுகளை சிலாங்கூர் அடையும் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றும் அவர் சொன்னார்.


