SELANGOR

மந்திரி பெசாரின் முடிவை எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டினார்!

4 நவம்பர் 2019, 7:30 AM
மந்திரி பெசாரின் முடிவை எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டினார்!

ஷா ஆலம், நவம்பர் 4:

பெடூலி சேஹாட் திட்டத்தில் பயனடைவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுத்த மந்திரி பெசார் அமிருடின் ஷாரயை எதிர்க்கட்சித் தலைவர் ரிஸாம் இஸ்மாயில் பாராட்டினார்.

கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கையின் போது இத்திட்டத்திற்கான அட்டைகள் வைத்திருப்போரின் எண்ணிக்கை 392,798 இல் இருந்து 55,277ஆக சரிவு கண்டது என்று சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

“எனினும், இந்த எண்ணிக்கையில் தற்போது 20 ஆயிரம் பெறுநர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மந்திரி பெசாரிக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.”

சிலாங்கூர் சட்டமன்றத்தில் நடந்த 2020 வரவு சவு திட்ட அறிக்கை மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.