ஷா ஆலம், நவம்பர் 4:
தற்போதைக்கு இலவச தண்ணீரின் அளவை 20 மீட்டரிலிருந்து 30 மீட்டருக்கு உயர்த்த வேண்டிய தேவை ஏற்படவில்லை என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். குடியிருப்போரில் பெரும்பாலோர் 20 முதல் 30 மீட்டர் வரையிலான தண்ணீரை மட்டுமே பயன்படுத்துவதால், அதிரிப்பு நடவடிக்கை தேவை என்று அவர் விள்ளக்கமளித்தார்.
ஆயினும், மலேசியா மற்றும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இம்மாநிலத்தில் அதிக அளிவிலான குடிநீர் பயன்படுத்தப்படுவதாக ஆய்வு காட்டுகிறது என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.
2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிலாங்கூரில் தனிமனிதர் ஒருவர் நாளொன்றுக்கு லீட்டர் தண்ணீரைப் பயன்படுத்தவதாகவும் இது ஆசியாவில்லேயே மிக அதிகமான அளவாகும் என்றார் அவர்.


