ஷா ஆலாம், நவம்பர் 3:
பிரதான விவேக மாநில இலக்கை அடையும் முயற்சி 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டுடன் தொடரப்படும் என்பதோடு 2020வாக்கில் இத்திட்டம் 46 விழுக்காடு மேம்பாடு காணும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.
வரும் 2025ஆம் ஆண்டில் விவேக சிலாங்கூர் நகர் இலக்கை அடையும் பொருட்டு மாநில அரசாங்கம் கடந்த ஆறு மாதங்களாக 300 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.
இத்திட்டத்தின் இலக்கு தற்போது 26 விழுக்காடு எட்டியிருப்பதாக மந்திரி பெசார் கூறினார்.
“மாநில அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு 1:1 எனும் விகிதாச்சாரத்தில் நிதி ஆதரவு வழங்க முதலீட்டாளர்களும் தனியார் துறையினரும் முன் வருவர் என்று நாங்கள் நம்புகிறோம்.விவேக சிலாங்கூர் மேம்பாட்டு திட்டத்தின் மொத்த செலவு 600 மில்லியன் வெள்ளி ஆகும்” என்று அவர் மேலும் சொன்னார்.


