கோலாலம்பூர், நவம்பர் 3:
நாட்டில் பரவலாக நடைபெறும் அத்துமீறிய சைக்கிள் பந்தய விவகாரத்திற்கு டீர்வு காண சாலை போகுவரத்து துறை (ஜேபிஜே) புதிய அணுகுமுறையை தேடி வருகிறது.
பொதுவாகவே 1959ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தை மதிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வகை செய்யும் விதி உள்ளது என்று ஜேபிஜே இயக்குநர் டத்தோஸ்ரீ ஷாஹாருடின் காலீட் கூறினார்.
“ஜேபிஜேயின் நடைமுறையின்படி சாலையில் சைக்கிளோட்டும் போது இரு கைகளை பிடியில் வைத்து கட்டுப்பாட்டுடன் செலுத்த வேண்டும்” என்றார் அவர்.
எனவே, கைபிடியில் கைகளை வைக்காமல் சவாரி செய்வது மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
“இது தவிர்த்து, ஜேபிஜேவின் விதி முறையின் ஒரு சைக்களில் பிரேக், மணி, சங்கிலி மற்றும் பொருத்தமான டயர் இருந்தால் மட்டுமே அதை ஒரு முழுமையான சைக்கிள் என்று அடையாளப்படுத்தும்:” என்றார் அவர்.


