ஷா ஆலாம், நவம்பர் 3:
இதுவரை சிலாங்கூர் மாநிலம் அடைந்து வரும் மேம்பாட்டிற்காக மாநில மக்கள் அனைவரும் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். மாநிலத்தின் வளப்பம் காரணமாக இதன் மக்கள் பல்வேறு மேம்பாட்டு அனுகூலங்களை அனுபவித்து வருகின்றனர் என்று மலேசிய இஸ்லாமிய சமய பிரசார அறவாரியத்தின் தலைவர் நிக் ஓமார் நிக் அப்துல் அஜிஸ் கூறினார்.
"சிலாங்கூர் மாநிலத்தை மேம்பாடு காணச் செய்வதற்கு உற்பத்தியைப் பெருக்கும் கடப்பாடு அனைத்து தலைவர்களுக்கும் உண்டு. இவர்கள் மக்களுக்கும் மாநிலத்திற்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்"என்றார் நிக் ஒமார்.
" இது போலவே மத்திய அரசாங்கத்திலும். இன்றைய தலைமுறையினரும் வருங்கால தலைமுறையினரும் பயனடையும் வகையில் கூட்டு வளப்ப இலக்கை நாம் கொண்டுள்ளோம்" என்று அவர் மேலும் சொன்னார்.


