துருக்கி, அக்.28-
நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றமே தமது பிரதமர் பதவி குறித்து முடிவெடுக்கும் என்று துன் டாக்டர் மகாதீர் முகமது வலியுறுத்தினார். அடுத்த பொதுத் தேர்தல் வரை தாம் பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியிருப்பது அவர்களது சொந்த அபிப்பிராயம் ஆகும் என்றார் அவர்.
“அது அவர்களது கருத்தாகும். எனது பிரதமர் பதவி குறித்து நம்பிக்கை கூட்டணி தலைவர் மன்றமே முடிவெடுக்கும்” என்றார் அவர்.
“14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் நான் பிரதமராக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பரிந்துரை செய்திருந்தால், இன்று அப்பதவியில் நீடிக்கச் சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருந்திருக்கும்” என்று துருக்கி நாட்டிற்கு இரண்டு நாள் வருகை மேற்கொண்டிருந்த துன் மகாதீர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


