ஷா ஆலம், அக்.25-
இவ்வாரம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளுக்கு போதிய உணவுப் பொருட்கள் இருப்பதாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைச்சு உறுதியளித்தது. உணவுப் பொருட்கள் குறிப்பாக தீபாவளி கொண்டாட்டத்தின் போது அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் போதுமான அளவில் இல்லை என்று தமது அமைச்சு இதுவரை எந்தவொரு புக்காரையும் பெறவில்லை என்று அமைச்சர் டத்தோஸ்ரீ ஆயுப் கூறினார்.
“தேங்காய் போன்ற பொருட்கள் போதுமான அளவு உள்ளன. கொண்டாட்ட கால தேவையை சாதகமாகப் பயன்படுத்தில் பொருட்கள் ஏதும் உயர்த்தப்பட்ட விலையில் விற்கப்படுகின்றனவா என நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்றார் அவர்.
சிலாங்கூர் மாநில அளவிலான தோட்டத்தில் இருந்து நேரடியாக விற்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின் அமைச்சர் மேற்கண்டவாறு பேசினார்.


