கோம்பாக், அக்டோபர் 27:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தீபாவளி திருநாளை முன்னிட்டு தமது சுங்கை துவா சட்ட மன்ற தொகுதியின் உட்பட்ட இந்திய வாக்காளர்களின் வீடுகளுக்கு வருகை புரிந்து தீபத் திருநாள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
காலை மணி 10.30-க்கு எஸ். விநாயகர் (40) மற்றும் புஷ்பா (40) குடும்பத்தினர் வீட்டுக்கு வருகை அளித்தார். வருடா வருடம் அமிரூடின் ஷாரி தங்களது வீட்டிற்கு வருகை புரிவார் என்று திருமதி புஷ்பா தெரிவித்தார். மேலும் பேசுகையில், அமிரூடின் தோசையோடு சிட்னியை விரும்பி சாப்பிடுவார் என்று பெருமிதம் கொண்டார் அவர்.
[caption id="attachment_361206" align="aligncenter" width="670"]
Amirudin Shari menikmati juadah tose dan chadni di rumah S Vinayagar sempena sambutan Deepavali di Kampung Bahtera, Batu Caves pada 27 Oktober 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI[/caption]
தொடர்ந்து அமிரூடின் சுங்கை துவா சட்ட மன்ற தொகுதியின் இந்திய சமுதாய தலைவர் மணிவண்ணன் மற்றும் சுபாஷினி இல்லத்திற்கு விஜயம் செய்தார். மணிவண்ணனின் இல்லம் பத்து கேவ்ஸ் இந்தியன் செட்டல்மெண்ட் கிராமத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


