பெட்டாலிங் ஜெயா, அக்.24-
இங்குள்ள 88 கடை உரிமையாளர்கள் பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றத்திடம் இருந்து 2019ஆம் ஆண்டு தூய்மையான உணவகம் மற்றும் கழிப்பறை விருதுக்கான சான்றிதழை பெற்றனர்.
உணவகங்களும் பொது கழிப்பறைகளும் தூய்மையாக ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாக இவ்விருதளிப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ பண்டார் முகமது சாயுத்தி பாக்கார் கூறினார்.
தங்கள் உணவகங்களை சிறப்பான முறையில் பேணுவதற்கு இவ்விருதளிப்பு நடவடிக்கை ஊக்கமளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நடவடிக்கையானது எம்பிபிஜே அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தூய்மையான உணவகங்களின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது என்றார் அவர்.


