கோலாலம்பூர், அக்.24-
பள்ளிகளில் விநியோகிக்கப்பட்ட பிரச்சார அம்சம் கொண்ட கேலிச்சித்திர நூல்களை உள்துறை அமைச்சு (கேடிஎன்) பறிமுதல் செய்யவிருக்கிறது. ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய அந்த கேலிச்சித்திர நூலுக்கு தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் கூறினார்.
இந்த நூல் இன்னமும் விநியோகத்தில் இருந்தால், அவற்றை நாம் பறிமுதல் செய்வோம். இவ்விவகாரத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதால், அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது என்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் முகைதின் தெரிவித்தார்.
இந்நூலின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படவிருக்கிறதே தவிர எந்தவொரு தரப்புக்கும் எதிராக அல்ல என்று அவர் விளக்கமளித்தார்.


