பாகு, அக்: 24-
நாம் எனப்படும் அணி சேரா நாடுகள் அமைப்பின் பங்களிப்பு அவசியமானதுஎன்ரு கருதும் மலேசியா, அவ்வமைப்பின் ஆரம்பக்கால வெளியுறவு கொள்கைக்கு திரும்ப வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ சைஃபூடின் அப்துல்லா கூறினார்.
2018ஆம் ஆண்டு மே மாதம் அரசாங்கத்தை நம்பிக்கை கூட்டணி கைப்பற்றியதும் அது மலேசியாவின் அடிப்படை வெளியுற்வு கொள்கைக்கு திரும்பியுள்ளது என்றார் அவர். அதன் காரணமாகத்தான், நாம் ரோஹின்யா மற்றும் பாலஸ்தீன விவகாரத்தில் குரல் கொடுத்து வருகிறோம். யேமன் விஷயத்தில் பக்காத்தான் அரசு அமைக்கப்பட்ட புதிதில் சவூதி அரேபியா தலைமையிலான அமைப்பில் ஈடுபடவில்லை என்று 18ஆவது நாம் உச்சநிலை மாநாட்டில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சைஃபூடின் கூறினார்.
“நம் நாட்டுடன் முன்பு அணுக்கமான உறவைக் கொண்டிருந்த ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் மீண்டும் உறவை புதுப்பிக்க மலெசியா விரும்புவதாக” அவர் சொன்னார்.


