கோலாலம்பூர், அக்.23-
மலேசியா – இந்தியா செம்பனை எண்ணெய் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று ஒரு வர்த்தக சங்கம் இந்தியாவிற்கு நெருக்குதல் அளித்து வரும் வேளையில், தென்னிந்திய அரசியல் கட்சி ஒன்று மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செம்பணை எண்ணெய்யின் அளவை குறைக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செம்பணை எண்ணெய்யின் அளவு எந்தளவு குறைக்கப்பட்டாலும், மலேசியாவில் வேலை பார்க்கும் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை பாதிக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (டிஎன்சிசி) கூறுகிறது.
“தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 லட்சம் பேர் தொடர்பு தொழில்நுட்பத் துறையிலும் உணவகங்களில் வேலை பார்க்கின்றனர்” என்று அக்கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
“அவர்களில் பெரும்பாலார் தங்கள் வருமானத்தில் 90 விழுக்காட்டை இந்தியாவில் வாழும் குடும்பத்தினருக்கு அனுப்புகின்றனர்” என்றார் அவர்.
டிஎன்சிசி என்பது இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு கிளையாகும்.


