NATIONAL

மாநிலத்தின் நிலைத்தன்மைக்கு பட்டதாரிகளே துண்களாவர்!

14 அக்டோபர் 2019, 5:10 AM
மாநிலத்தின் நிலைத்தன்மைக்கு பட்டதாரிகளே துண்களாவர்!

ஷா ஆலம், அக்.14-

மாநிலத்தின் நிலைத்தன்மை மற்றும் நாகரீக வளர்ச்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பட்டதாரி மாணவர்கள் மாநில முக்கிய தூணாக விளங்குகின்றனர் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார். ஏனெனில் கல்வியானது ஒரு பகுதியை சிறந்ததோர் இடமாக உருமாற்றவும் பலவீனமானவர்கள் வலுப்பெறச் செய்யுவும் கூடியது என்றார் அவர்.

“நம்மிடம் 150 உயர்க்கல்வி கழகங்கள் உள்ளன. ஆண்டுடோறும் பல்லாயிரக் கணக்கான பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். ஆனால் இவர்களுடனான தொடர்பு சிறப்பாக இல்லையெனில் இவை அனைத்தும் எந்தவொரு பலனையும் தராது” என்றார் அவர்.

“எனவே, வரும் நவம்பர் முதல் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் சிலாங்கூர் வரவு செலவு திட்டத்தில் கல்வி மீது அதிக கவனம் செலுத்தவிருக்கிறது. மாநிலத்தை மேலும் மேம்படுத்த கல்வி ஒரு முக்கிய அம்சமாகும்” என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.