PBT

பறிமுதல் செய்யப்பட்ட வெ.74 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை எம்பிகே அழித்தது!

17 செப்டெம்பர் 2019, 4:21 AM
பறிமுதல் செய்யப்பட்ட வெ.74 ஆயிரம்  மதிப்பிலான பொருட்களை எம்பிகே அழித்தது!

கிள்ளான், செப்.17-

கிள்ளான் நகராண்மைக்கழகம் பறிமுதல் செய்த 74,000 வெள்ளி மதிப்பிலான பல்வேறு பொருட்கள் இன்று அழிக்கப்பட்டன.

நகராண்மைக் கழக கிடங்கில் கழகத்தின் தலைவர் டத்தோ முகமது யாசிட் பிடின் தலைமையில் இப்பொருட்கள் அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கி இவ்வாண்டு ஜூலை மாதம் வரையில் அமலாக்கத் தரப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட 42,844 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

அழிக்கப்பட்ட பொருட்களில் 1,798 மது புட்டிகள், 2,634 டிவிடி/விசிடி குறுந்தட்டுகள் ஆகியவையும் அடங்கும்.

2007ஆம் ஆண்டு எம்பிகே சட்டத்தின் கீழ் அனுமதி இன்றி வர்த்தகம் புரிந்த குற்றத்திற்காக பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் இவற்றுள் அடங்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.