NATIONAL

அமிரூடின்: மக்களுக்கு எத்தகைய அச்சத்தையும் கெஅடிலான் உறுப்பினர்கள் உருவாக்க வேண்டாம்!!!

8 செப்டெம்பர் 2019, 8:31 AM
அமிரூடின்: மக்களுக்கு எத்தகைய அச்சத்தையும் கெஅடிலான் உறுப்பினர்கள் உருவாக்க வேண்டாம்!!!

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 8:

கெஅடிலான் கட்சியின் உறுப்பினர்கள் நாட்டின் நிலைத்தன்மை மற்றும் அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என்றும் மக்களிடையே அச்சத்தை உருவாக்க வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தலைவர் அமிரூடின் ஷாரி வலியுறுத்தினார். இதன் மூலம் கட்சி தொடர்ந்து வலுப்படுத்தும் வேளையில், கட்சியின் தலைவர்கள் மாநிலத்தையும் மற்றும் மத்திய அரசாங்கத்தையும் நேர்த்தியான முறையில் வழிநடத்த முடியும் என்றார்.

" நாம் எதிர்க்கட்சி அல்ல, நம்மை எப்போதும் நிலையற்ற தன்மையில் இருக்க செய்வதற்கு. நாம் நமது பலம் மற்றும் அதிகாரத்தை காட்டும் தருணம் இதுவல்ல. சில நேரங்களில் நாம் நமது நோக்கத்தில் இருந்து விலகி உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம். பிரதமராகவோ அல்லது துணைப் பிரதமராக யார் வந்தாலும் நான் ஆதரவு தர தயாராக இருக்கிறேன். இது போன்ற விஷயங்களை நாம் தனிப்பட்ட கூட்டங்களில் பேசிக் கொள்ளலாம்.பதவிக்காக தகவல் ஊடகங்களுக்கு அறிக்கைகள் தேவையில்லை. இப்படி போன்ற நடவடிக்கைகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி விடும்," என்று தாமான் மேடான் எம்பிபிஜே மண்டபத்தில் நடைபெற்ற பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதியின் ஆண்டு கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றும் போது இவ்வாறு அமிரூடின் ஷாரி கெஅடிலான் கட்சியின் உறுப்பினர்களுக்கு நினைவு படுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.