சுபாங் ஜெயா, ஆக.30-
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் மாநகராட்சி அந்தஸ்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் நோராய்னி ரோஸ்லான் தெரிவித்தார்.
ஊராட்சி மன்றத்தை மாநகரமாக உயர்த்தும் விண்ணப்பத்திற்கு மாநில அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் கிடைத்திருப்பதாக அவர் சொன்னார்.
எனினும், இந்த விண்ணப்பத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறும் பொருட்டு மாநில அரசாங்கள் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக நோராய்னி கூறினார்.
“ஓர் ஊராட்சி மன்றம் மாநகராட்சி மன்றமாக தகுதி உயர்த்தப்படுவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலை அது முதலில் பெற வேண்டும். இவ்விவகாரம் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.


