ஷா ஆலம், ஆக.30-
தங்கள் வர்த்தகத் துறையை வலுப்படுத்தும் நோக்கத்தில் சிலாங்கூர் பல்கலைக்கழகமும் (யுனிசெல்) மலேசிய வர்த்தக நெறிமுறை கழகமும் (பிஈஐஎம்) புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைழுத்திட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கையில் யுனிசெல் சார்பில் அதன் துணை வேந்தரும் தலைவருமான பேராசிரியர் டாக்டர் முகமது ரிட்சுவானும் பிஈஐஎம் சார்பில் அதன் உதவித் தலைவர் ஒங் இயுவ் ஹோக்கும் கையெழுத்திட்டனர்.
வர்த்தக நடவடிக்கையை நெறிமுறையோடு மேற்கொள்வதற்கான ஆய்வு, பயிற்சி போன்ற அம்சங்களில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதாக ரிட்சுவான் கூறினார்.
வர்த்தக நடவடிக்கையை நெறிமுறையோடு மேற்கொள்வதற்கு மாணவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த உடன்படிக்கை வகை செய்யும் என்றும் அவர் சொன்னார்.


