கிள்ளான், ஆக.30-
உணவகமாகவும் பலசரக்கு கடைகளாகவும் செயல்பட்டு வந்த 8 அந்நிய நாட்டவர்களின் வீடுகளில் கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) அதிரடி. சோதனையில் ஈடுபட்டது.
இக்கட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதாக புகார் கிடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலாக்க அதிகாரிகள் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக எம்பிகேவின் தொடர்பு பிரிவு இயக்குநர் நோர்ஃபிஸா மாஹ்ஃபிஸ் தெரிவித்தார்.
“இந்தப் பகுதி அந்நிய நாட்டவர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. அவர்கள் தங்கள் விருப்பம் போல் இங்கு செயல்பட்டு வந்தனர்” என்றார் அவர்.
இந்நடவடிக்கையின்போது முறையான உரிமமின்றி வணிகத் தலமாக செயல்பட்ட காரணத்தால் இவ்விடுகளை அமலாக்க அதிகாரிகள் சீல் வைத்தனர் என்றும் அவர் சொன்னார்.
அந்நிய நாட்டவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இது போன்ற சோதனை நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்ள எம்பிகே திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.


