RENCANA PILIHAN

ஒருவரின் வெற்றியை அவரது வாழ்க்கைத் தரம் உறுதி செய்யும் - துன் மகாதீர்

13 ஆகஸ்ட் 2019, 4:39 AM
ஒருவரின் வெற்றியை அவரது வாழ்க்கைத் தரம் உறுதி செய்யும் - துன் மகாதீர்

புத்ராஜெயா, ஆக.13-

ஒருவரின் வெற்றி அவரது வாழ்க்கைத் தரத்தை கொண்டே மதிப்பிடப்படுகிறதே அன்றி ஒருவரின் நிறத்தயோ இதர அம்சங்களைக் கொண்டோ அல்ல என்பதை இந்நாட்டு மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

“உதாரணமாக, ஒருவர் சோம்பித் திரிந்தால், உழைக்க மறுத்தால், அவரால் நிச்சயம் வெற்றி பெற முடியாது” என்றார்.

“அதேவேளையில், நாம் சுறுசுறுப்பாக உழைப்பவராக இருந்து கவனமாக வேலை செய்பவராக இருந்தால், அந்த வேலையினால் ஏற்படும் பயன் சிறப்பாகவே அமைந்து அவர் வெற்றி பெறுவார்” என்று தேசிய நிலையிலான குடிமை பயிற்சி கல்வியைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் மக்கள் ஒரு சமுதாயமாக வாழ்கின்றனர். எனவே ஒவ்வொரு தனிநபரின் நடவடிக்கையும் நாட்டின் மேம்பாட்டிற்கு அவசியமாகும் என்று மகாதீர் வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.