ஷா ஆலம், ஆக.9-
நாட்டின் பொருளாதார மதிப்பை உயர்த்த உதவும் அதேவேளையில் மாநிலத்தின் வளப்பத்தை உயர்த்தும் சிலாங்கூரின் முயற்சிக்கு உதவ பொருளாதார விவகார அமைச்சு கடப்பாடு கொண்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் சிலாங்கூர் முக்கிய பங்காற்றுவதே இதற்குக் காரணம் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.
டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் உயர்ந்த மதிப்பிலான தொழில்துறையின் பொருளாதாரத்தை அதிவேகத்தில் உயர்த்தும் வியூகத்தை சிலாங்கூர் கொண்டுள்ளது என்றார் அவர்.
“கடந்த 30 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவு 2018இல் 18.95 பில்லியன் வெள்ளி முதலீட்டைக் கவர்ந்ததன் மூலம் சிலாங்கூர் புதிய வரலாறு ஒன்றை படைத்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் எதிர்காலத்திற்கென ஒரு தொலைதூர திட்டத்தை வகுக்கும் தகுதி மந்திரி பெசார் அமிருடின் ஷாரிக்கு உள்ளது” என்று அவர் புகழாரம் சூட்டினார்.


