ஷா ஆலம், ஆக.9-
12ஆவது மலேசிய திட்ட தயாரிப்பில் பங்கெடுக்கும் நிகழ்ச்சி மூலம் மாநிலத்தின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுவதோடு ஒன்றிணைந்து மேம்படுவோம் என்ற மாநில கொள்கைக்கு ஏற்புடையதாகவும் இருக்கும்.
மாநிலத்தின் பொருளாதார வளப்பத்தை மக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே ஒன்றிணைந்து மேம்படும் சிலாங்கூர் என்ற கொள்கையின் நோக்கமாகும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
“எனவே, மாநிலத்தின் மேம்பாட்டில் இருந்து எந்தவொரு தரப்பும் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய மாநில அரசு உறுதிபூண்டுள்ளது” என்றார்.
“சமுக நல உதவித் திட்டங்களைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் வாயிலாக மாநில மக்களை மேம்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் வளம் முறையாக பகிர்ந்தளிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார் அவர்.


