ஷா ஆலம், ஆகஸ்ட் 8:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மாண்புமிகு அமிரூடின் ஷாரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக பரவி வரும் தகவல் உண்மையில்லை என்றும் மாநில அரசாங்கத்தின் நிலைத் தன்மையை சீர்குலைக்கும் முயற்சி ஆகும் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் எலிசபெத் வோங் குறிப்பிட்டார். இதற்கு முன்பு, பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு நடத்துவது முதல் முறையல்ல என்று விவரித்தார்.
மேலும், சிலாங்கூர் மாநில சட்டசபை சபாநாயகர் எங் சுவி லிம்மை பதவி நீக்கம் செய்யப் போவதாக வெளியான தகவலில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளிடையே இடைவெளியை ஏற்படுத்த முயற்சி என்று எலிசபெத் சாடினார்.


