பாங்கி, ஆக.6-
இங்குள்ள தாமான் தேமா ஆயர் பாங்கி வொண்டர்லெண்டிற்கு வருகை புரிந்த சுமார் 80 பேராளர்கள் அடங்கிய வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை சிலாங்கூர் சுற்றுலா துறை வரவேற்று உபசரித்தது.
இந்தப் பேராளர்கள் குழுவில் தென் கொரியா, தைவான், இந்தோனேசியா, இலங்கை மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று சிலாங்கூர் சுற்றுலா துறையின் நிர்வாகி முகமது ஹாஃபீஸ் ஹனிப் கூறினார்.
“இப்பேராளர்கள் அனைவரும் அண்மையில் தாமான் பொட்டானியில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு அனைத்துலக உள்நாட்டு கலை விழாவில் பங்கேற்றவர்களாவர்” என்றார்.
“இம்மாநிலத்தில் சுற்றுப் பயணிகளைக் கவரும் பல இடங்களும் பல்வேறு வசதிகளும் இருப்பதை வெளிநாட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சுற்றுலா துறை விரும்புகிறது” என்றார் அவர்.


