ஷா ஆலம், ஜூலை 25-
பல்கலைக்கழக நுழைவுக்கான பரிசு என்றழைக்கப்படும் உயர் கல்வி வெகுமதிக்கு (எச்பிஐபிடி) மாணவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என மாநில அரசாங்கம் கூறியது.
இந்த வெகுமதிக்குத் தகுதி பெறுவதற்கு குடும்ப வருமானம் 3,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
“முழுமையான கல்வி மூலம் மக்களை மேம்படுத்துதல் என்ற கொள்கைக்கு ஏற்ப இந்த வெகுமதி திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.
மாநில அரசாங்கம் வழங்கும் ஆயிரம் வெள்ளி எச்பிஐபிடி தொகைக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தொடங்கி விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் சொன்னார்.
இந்த எச்பிஐபிடி திட்டம் மறுசீரமைக்கப்பட்டதானது மக்களுக்கு நன்மையளிக்கும் மாநில அரசாங்கத்தின் திட்டங்கள் வழி மேலும் பலர் பயனடைவதை உறுதி செய்துள்ளது என்றார்.


