பட்டர்வொர்த், ஜூலை 25-
பினாங்கு சாலை போக்குவரத்து இலாகா அமலாக்க அதிகாரிகள் தொடர்பான ஊழல் வழக்கில் மேலும் அறுவர் செஷ்ன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்ட எடைக்கும் கூடுதலான சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனமோட்டியின் குற்றத்தை மறைக்க போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒருவரிடமிருந்து கையூட்டு பெற்றதாக அந்த அறுவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கட்டம் கட்டமாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கும் 18 பினாங்கு ஜேபிஜே அமலாக்க அதிகாரிகளில் இந்த அறுவரும் அடங்குவர். முன்னதாக, தரை போக்குவரத்து ஆணையத்தின் (ஸ்பாட்) அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து ஜேபிஜே அதிகாரிகள் போக்குவரத்து நிறுவன இயக்குநர் ஒருவரிடமிருந்து 73,600 வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.


