SELANGOR

குடிநீர் விநியோகத் தடை 77% சீரடைந்துவிட்டது!

23 ஜூலை 2019, 2:12 AM
குடிநீர் விநியோகத் தடை  77% சீரடைந்துவிட்டது!

ஷா ஆலம், ஜூலை 23-

சிலாங்கூர் ஆற்றில் ஏற்பட்ட டீசல் எண்ணெய் கசிவைத் தொடர்ந்து சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலவிய குடிநீர் விநியோகத் தடை 77 விழுக்காடு சீரடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட கோம்பாக் மற்றும் கோல சிலாங்கூர் பகுதிகளில் குடிநீர் விந்யோகம் முறையே 94 மற்றும் 90 விழுக்காடு சீரடைந்துள்ளதாக ஆயர் சிலாங்கூர் நிர்வாக நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவுத் தலைவர் அப்துல் ராவோஃப் அகமது தெரிவித்தார்.

கோலாலம்பூர் பகுதியில் குடிநீர் விநியோகம் 82 விழுக்காடு சீரடைந்துள்ள வேளையில், கிள்ளான்/ ஷா ஆலம் 75 விழுக்காடு, உலு சிலாங்கூர் 47 விழுக்காடு மற்றும் கோல லங்காட் 39 விழுக்காடு சீரடைந்துள்ளதாக அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் இவ்வாரம் சனிக்கிழமை காலை மணி 9க்குள் குடிநீர் விநியோகம் முழுமையாக சீரடைந்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.