NATIONAL

விவசாயம் சார்ந்த தொழில்துறை சந்திப்புக் கூட்டம்: நெல் மற்றும் மீன் பிடித்துறை குறித்து விவாதிக்கப்படும்

22 ஜூலை 2019, 11:28 PM
விவசாயம் சார்ந்த தொழில்துறை சந்திப்புக் கூட்டம்: நெல் மற்றும் மீன் பிடித்துறை குறித்து விவாதிக்கப்படும்

ஷா ஆலம், ஜூலை 23-

நாட்டின் புதிய விவசாய குறிக்கோளுக்கு ஏற்ப, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைச்சுக்கும் விவசாயம் சார்ந்த தொழில்துறைக்கான மாநில ஆட்சிக் குழுவுக்கும் இடையிலான சந்திப்புக் கூட்டத்தில் இம்முறை நெல் மற்றும் மீன் பிடி துறை ஆகியவை குறித்து விவாதிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்தச் சந்திப்புக் கூட்டத்தின்போது இளம் விவசாயிகள் மற்றும் நிலங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் டத்தோ சாலாஹுடின் ஆயுப் கூறினார்.

“இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து விவசாயம் சார்ந்த தொழில்துறைக்கான் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் ஆகியோரோடு சபா மற்றும் சரவாக் விவசாய அமைச்சர்களும் கலந்து கொள்வர்” என்றார் அவர்,

“மத்திய மற்றும் மாநில அளவில் நிலுவையில் இருக்கும் நில விவகாரங்களில் மாநில அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்தும் நாங்கள் விவாதிக்க உள்ளோம்” என்று அவர் மேலும் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.