SELANGOR

சிலாங்கூரின் அனைத்து ஊராட்சி மன்றங்களும் 5 நட்சத்திர தர விருதை வென்றன!

9 ஜூலை 2019, 4:41 AM
சிலாங்கூரின் அனைத்து ஊராட்சி மன்றங்களும் 5 நட்சத்திர தர விருதை வென்றன!

ஷா ஆலம், ஜூலை 8-

ஊராட்சி மன்றங்களுக்கான நட்சத்திர தர மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி மன்றங்களும் ஐந்து நட்சத்திர தர விருதைப் பெற்ற மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது. இந்த அடைவு நிலையானது மக்களுக்கு சேவை வழங்கும் முறையை மேம்படுத்த 12 ஊராட்சி மன்றங்களும் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் ஆக்கப்பூர்வ பயனை அளித்துள்ளதைக் காட்டுவதாக ஊராட்சி மன்ற, பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

2016ஆம் ஆண்டு 10 ஊராட்சி மன்றங்கள் ஐந்து நட்சத்திர விருதுகளைப் பெற்ற வேளையில் இரு ஊராட்சி மன்றங்கள் இரண்டு நட்சத்திர விருதுகளை மட்டுமே பெற்றன. இந்த அடைவு நிலையோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டின் அடைவு நிலை மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது என்றார் அவர்.

எனவே, இந்த அடைவு நிலையானது அனைத்து ஊராட்சி மன்றங்களும் தங்கள் அடைவு நிலையைத் தற்காக்க வேண்டும் என்ற ஊக்கத்துடன் செயல்படுவதற்கு வகை செய்யும் என்று இங் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.