சிப்பாங், ஜூன் 25-
தஞ்சோங் காராங்கில் இருந்து சபாக் பெர்ணம் செல்லும் ஜாலான் பெர்செகுத்துவாந் சாலையைத் தரம் உயர்த்தும் பரிந்துரையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் மாற்று நெடுஞ்சாலையாக மேற்கு கரை கட்டுமான சுற்றுச் சாலை திகழக் கூடுமென அடிப்படை வசதி. பொது போக்குவரத்து, நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கான் ஆட்சிக் குழு உறுப்பினர் பொறியியலாளர் இர்ஸாம் ஹாஷிம் கூறினார்.
முன்னதாக மாநில நடவடிக்கை மன்றத்துடன் தமது தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியதாக அவர் சொன்னார்.
மேற்கு கரை நெடுஞ்சாலையின் வழியில் அமைந்துள்ள இந்த தஞ்சோங் காராங் – சபாக் பெர்ணம் சாலையின் தரம் நெடுஞ்சாலையின் தரத்திற்கு ஈடாக இருப்பது அவசியமாகும். ஏனெனில் இந்தச் சாலையானது டோல் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக அமையும் என்றார் அவர்.


