SELANGOR

ஸ்மார்ட் வாடகை திட்டத்திற்காக எல்பிஎச்எஸ் 1,000 வீடுகளை வாங்கியது

19 ஜூன் 2019, 11:12 PM
ஸ்மார்ட் வாடகை திட்டத்திற்காக எல்பிஎச்எஸ் 1,000 வீடுகளை வாங்கியது

கிள்ளான், ஜூன் 20:

ஸ்மார்ட் வாடகை திட்டத்திற்காக இதுவரை 993 வீடுகளை சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் (எல்பிஎச்எஸ்) வாங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வாடகைக்கு விடுவதற்காக வாங்கப்பட்டுள்ள அந்த வீடுகளுக்காக 2016ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை மொத்தம் 210 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வாழ்க்கை துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹனிசா தால்ஹா கூறினார்.

அந்த வீடுகளில் இதுவரை 341 வீடுகளுக்கு மாதம் 450 வெள்ளி முதல் 700 வெள்ளி வரை வாடகை வசூலிக்கப்படுகிறது என்றார் அவர். மேலும் 161 வீடுகளை சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை நிறுவனம் வாடகைக்கு விடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

“இந்த வீடுகள் யாவும் சிலாங்கூரில் அதிக மக்கள் வாழும் ரவாங், காஜாங், கோலசிலாங்கூர், பூச்சோங் மற்றும் ஷா ஆலம் ஆகிய பகுதிகளில் இருக்கின்றன” என்றார் அவர்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.