NATIONAL

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் 5,430 மாணவர்களுக்கு இடம்

17 ஜூன் 2019, 4:48 AM
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் 5,430 மாணவர்களுக்கு இடம்

நீலாய், ஜூன் 17:

நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர் பயிற்சி கழகங்களில் (ஐபிஜி) ஆசிரியர் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு பயில 5,430 மாணவர்களுக்கு இடம் அளிக்கப் பட்டுள்ளதாக ஐபிஜி மாணவர் சேர்ப்பு பிரிவு இயக்குனர் ஷம்சுல் சனிருன் தெரிவித்தார்.

தேர்வுபெற்ற மாணவர்கள் அனைவரும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆசிரியர் துறையில் பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் நிரணயிக்கப்படும் பள்ளிகளில் பணிக்கமர்த்தப்படுவர் என்றார் அவர்.

“குறைந்த பட்சம் ஐந்து பாடங்களில் சிறப்பு தேர்ச்சி உட்பட தேசிய மொழி, ஆங்கிலம் மற்றும் வரலாறு பாடங்களில் கிரேடிட் என்ற தகுதியின் அடிப்படையிலேயே அனைத்து மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்” என்றும் அவர் சொன்னார்.

“இவைத் தவிர்த்து, பிரத்தியேகத் துறைக்கான நிபந்தனைகளயும் அவர்கள் நிறைவு செய்ய வேண்டும் . இவர்கள் 2024ஆம் ஆண்டில் ஆசிரியர்களாகப் பணிபுரிவர்” என்று பெர்னாமாவிடம் ஷம்சுல் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.