NATIONAL

மகாதீர் மற்றும் அன்வார்: ஓரினச் சேர்க்கை காணோளியில் உண்மையில்லை !!!

12 ஜூன் 2019, 2:38 PM
மகாதீர் மற்றும் அன்வார்: ஓரினச் சேர்க்கை காணோளியில் உண்மையில்லை !!!

கோலா லம்பூர், ஜூன் 12:

பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலியை தொடர்புப்படுத்தி வெளியிடப்பட்ட ஓரினச் சேர்க்கை காணோளியில் உண்மையில்லை என பிரதமர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

இது உண்மையானது என நான் நம்பவில்லைதற்போதையக் காலக்கட்டத்தில்தொழில்நுட்பத்தில் ​​நல்ல அனுபவம் பெற்றிருந்தால் எம்மாதிரியான காணொளிகளையும் படங்களையும் வெளியிடலாம். ஒருவேளை நீங்கள் என்னையும் அம்மாதிரியான காணொளிகளில் பார்க்கக்கூடும்” என்று அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

கண்டிப்பாக அரசியல் பகை மற்றும் சதி வேலையாகத்தான் இது இருக்க முடியும் என பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டின் அரசியல் நடைமுறையை தூய்மையாக வைத்திருக்க கேட்டுக் கொண்டதோடு, இது சரியான முறையில்லை எனவும், இது அகற்றப்படவில்லை என்றால் அன்றாடம் இம்மாதிரியான காணோளிகள் படங்களை நாம் பார்க்க நேரிடும் என்றும் பிரதமர் கூறினார்.

பிகேஆர் கட்சியின் சந்துபோங் தொகுதி இளைஞர் பகுதித் தலைவர் ஹசிக் அசிஸ் வெளியிட்ட காணோளியை சாடி பேசிய பிரதமர், அவர் அவ்வாறு செய்திருக்க தேவையில்லை என்றார். ஒருவேளை உண்மையாக நடந்திருந்தால், ஒருவர் அவமானத்தில் இருந்திருப்பார். ஆனால், இவரோ தைரியமாக முன்வந்து வெட்கமே இல்லாது காணொளி வெளியிடுவது அருவருப்பாக உள்ளது என்று கூறினார். 

இதனிடையே, இது குறித்து கருத்துரைத்த பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம், இத்தகைய ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி அரசியல் நடத்துவதை கடுமையாக எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை அது தார்மீக, மத மற்றும் ஒழுக்கத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.

அரசியலில் எவரேனையும் பலி தீர்ப்பதற்கு இது சரியான செயலாக இருக்காது என அன்வார் தெரிவித்துள்ளார்.

மேலும், இது கண்டிப்பாக உள்கட்சி விவகாரத்தின் பேரில் வெளியிடப்பட்டதாக இருக்க முடியாது எனவும் அன்வார் கூறினார். இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் பிகேஆர் கட்சி தலையிடாது எனவும், அவர்கள் இதனை தீவிரமாக ஆராய்ந்து உண்மையை வெளியிடுவர் என நம்புவதாகவும் கூறியுள்ளார்

#செல்லியல்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.