NATIONAL

குறுகிய கால விகிதம் நிலைத்தன்மையுடன் இருக்கும்! -பேங்க் நெகாரா

7 ஜூன் 2019, 9:06 AM
குறுகிய கால விகிதம் நிலைத்தன்மையுடன் இருக்கும்! -பேங்க் நெகாரா

கோலாலம்பூர், ஜூன் 7-

நிதித்துறை திட்டங்களில் எளிதாக ரொக்கம் புரளும் வசதியை மலேசிய மத்திய வங்கி (பேங்க் நெகாரா)குறைத்ததன் மூலம் குறுகிய கால விகிதம் நிலைத்தன்மையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரம்பரிய நிதித்துறையில் இன்றைய எளிய ரொக்கப் புழக்கம் 29.01 பில்லியன் வெள்ளியாகவும் இஸ்லாமிய நிதித்துறையில் 14.18 பில்லியன் வெள்ளியாகவும் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

இதனிடையே, பாரம்பரிய நிதித்துறை நாணய சந்தையில் மூன்று குத்தகைகளை மத்திய வங்கி வழங்க உள்ளது. 7 நாட்களுக்கு 2 பில்லியன் வெள்ளி, 14 நாட்களுக்கு 1 பில்லியன் வெள்ளி மற்றும் 21 நாட்களுக்கு 1 பில்லியன் ஆகிய குத்தகைகளே அவை என்று தெரிவிக்கப்பட்டது.

அதே வேளையில், இஸ்லாமிய நிதித்துறையில் 31 நாட்களுக்கு 3.8 பில்லியன் வெள்ளி மதிப்பிலான இர்மா எனும் குத்தகையையும் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.