ஷா ஆலம், ஜூன் 4-
சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நோன்பு பெருநாள் கொண்டாடும் இம்மாநில முஸ்லிம் அன்பர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். கசப்பான சம்பவங்களை மறந்து இப்பெருநாளை குதூகலத்துடன் கொண்டாடும்படி இம்மாநில மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
"இப்புனித நோன்பு மாதத்தில் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அளித்த எல்லா வளங்களுக்கும் நாம் நன்றி கூறுவோம்" என்றார் மந்திரி பெசார்.
" நமது பாவங்களை இறைவன் மன்னிக்கும் மாதம் இது. இப்புனித நாளில் அனைவரும் சகோதரத்தைப் பேணுவோம்" என்று நோன்பு பெருநாளையொட்டி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.
