NATIONAL

ஐந்து நஃபாஸ் கிளை நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன

29 மே 2019, 4:17 AM
ஐந்து நஃபாஸ் கிளை நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன

அலோர்ஸ்டார், மே 29-

தேசிய விவசாயிகள் கழகம் (நஃபாஸ்) லாபகரமற்ற தனது ஐந்து கிளை நிறுவனங்களை தற்காலிகமாக மூடியது.

இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து வழி நடத்துவதா இல்லையா என்பதை நஃபாஸ் ஆராயும் என்று கூறப்படுகிறது.

இந்நிறுவனங்களால் தொடர்ச்சியான இழப்பு ஏற்பட்டிருப்பதோடு இவை எந்தவொரு வர்த்தகத்திலும் ஈடுபடாததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நஃபாஸ் தலைவர் டத்தோ பாரோல்ராசி முகமது ஜாவாவி கூறினார்.

"இந்நிறுவனங்களில் ஒன்று இந்தியாவுடன் நிலையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. தலைநகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றுடன் இது மேற்கொண்டு வரும் டிப்ளோமா பயிற்சி திட்டமும் எவ்வித பலனையும் அளிக்கவில்லை" என்றார் அவர். இப்போதைக்கு இந்த நிறுவனத்தை நாங்கள் முழுமையாக மூடவில்லை. கடந்த மாதம் முதல் தற்காலிகமாக நடவடிக்கையை நிறுத்தியுள்ளோம்" என்று  அலோர் மெங்குடு சட்டமன்ற உறுப்பினருமான பரோல்ரோஸி செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.