NATIONAL

போலீஸ் நிலையங்களை சீரமைக்க ஃபாமி வெ. 2 லட்சம் ஒதுக்கீடு

28 மே 2019, 1:38 AM
போலீஸ் நிலையங்களை சீரமைக்க ஃபாமி வெ. 2 லட்சம் ஒதுக்கீடு

கோலாலம்பூர், மே 28-

தனது நாடாளுமன்ற தொகுதியின் கீழ் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் குடியிருப்பு பகுதிகளைச் சீரமைக்கும் பொருட்டு லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாஹ்மி ஃபாட்சில் 2 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பந்தாய் போலீஸ் நிலையம், டிரவர்ஸ் போலீஸ் நிலையம் மற்றும் பெட்டாலிங் போலீஸ் நிலையம் ஆகியவையே சீரமைப்புக்கு உட்பட்டவை.

சீரமைப்பு பணிகளுக்காக ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் தலா 50,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

"லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் கீழ் இந்த ஒதுக்கீட்டை நான் அங்கீகரித்துள்ளேன். எந்த வகையான சீரமைப்பைச் செய்வது என்பது குறித்து போலீஸ் நிலைய தலைவர்கள் மற்றும் புக்கிட் அமான் குடியிருப்பு தரப்பினருடன் நான் பேச்சு நடத்துவேன்" என்றார்.

"அவர்களுக்குத் தேவையானவை என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அதிகாரிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளேன்" என்று புக்கிட் அமான் பள்ளிவாசலில் சமூக திட்டம் ஒன்றைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.