SELANGOR

மே மாதம் வரை 13 வட்டி முதலை சம்பவங்கள் பதிவு

22 மே 2019, 6:08 AM
மே மாதம் வரை  13 வட்டி முதலை சம்பவங்கள் பதிவு

கூச்சிங், மே 22-

இம்மாதம் வரை இம்மாநிலத்தில் 1லட்சம் வெள்ளி இழப்பை ஏற்படுத்திய 13 சட்டவிரோத வட்டி முதலைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்ட வேளையில் எஞ்சியவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வருவதாக சரவாக் வர்த்தக குற்றப்புலனாய்வு தலைவர் சூப்ரிண்டென்டன் முஸ்தாபா கமால் கனி அப்துல்லா தெரிவித்தார்.

"எவரும் வன்முறையிலோ அல்லது மற்றவர்களின் பாதுகாப்புக்கு மருட்டல் ஏற்படுத்தும் செயல்களிலோ ஈடுபடக் கூடாது" என்றார் முஸ்தாபா.

"கடன் கொடுத்தவர்கள் தங்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் இது குறித்து பொது மக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். ரகசியம் பாதுகாக்கப்படுவதோடு இவர்களின் பாதுகாப்பையும் போலீசார் அணுக்கமாகக் கண்காணித்து வருவர்" என்று இங்கு சரவாக் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.