NATIONAL

கேசவன் தம் மீது சுமத்தப்பட்ட செக்ஸ் தொல்லை புகாரை காவல்துறையிடம் விட்டு விட்டார் !!!

18 மே 2019, 6:53 AM
கேசவன் தம் மீது சுமத்தப்பட்ட செக்ஸ் தொல்லை புகாரை காவல்துறையிடம் விட்டு விட்டார் !!!

ஈப்போ, மே 18:

சுங்கை சீப்போட் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு.கேசவன் தம் மீது சுமத்தப்பட்ட செக்ஸ் தொல்லை புகாரை காவல்துறை விசாரிக்க விட்டு விட்டதாக தெரிவித்தார். காவல்துறையிடம் தாம் வாக்குமூலம் கொடுப்பதாகவும் மற்றும் விசாரணையில் முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதி அளித்தார். விசாரணைக்கு உதவ தம்மிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் காவல்துறையிடம் வழங்க இருப்பதாக மேலும் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற தகவல் ஊடகங்கள் உடனான சந்திப்பில் கேசவன் சம்பந்தப்பட்ட பெண்ணை கடந்த 2017-இல் இருந்து தெரியும் என்று ஒப்புக் கொண்டார். ஊத்தான் மெலிந்தாங் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது வாக்காளர்களை தமது தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்ட நடவடிக்கையை எதிர்க்கும் போது இப்பெண்ணை சந்தித்தாக அவர் விவரித்தார் .

" என்னை தொடர்பு கொண்ட அப்பெண் வாக்காளர்களை ஊத்தான் மெலிந்தாங் சட்ட மன்ற தொகுதிக்கு மாற்றும் நடவடிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தில் உதவுவதாக கூறினார். தன்னார்வ முறையில் பணியாற்ற வந்த அவரின் உதவியை திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டேன். ஏனெனில், பலர் இந்த பெண்ணை போன்று எனக்கு உதவ வந்தனர்," என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கேசவன் தெரிவித்தார்.

ஆனால், பின்னாளில் இந்தப் பெண் தனது குடும்ப வாழ்க்கையில் தலையிட ஆரம்பித்தது மட்டுமின்றி தனது மனைவியின் மீது அவதூறு பரப்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, சுங்கை சீப்போட் மாவட்ட காவல்துறை ஆணையர், சூப்ரிடேண்டன் முகமட் கைஸாம் அமாட் ஷாபூடின் காவல்துறை அலுவலகத்தில் இப்புகார் பதிவு செய்துள்ளதை உறுதி செய்தார். இப்புகார் செக்சன் 507 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார் .

#பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.