SELANGOR

தெ சிக்ரட் கார்டனுக்கு வருகை புரிந்த தெங்கு பெர்மைசூரி

1 மே 2019, 11:36 PM
தெ சிக்ரட் கார்டனுக்கு வருகை புரிந்த தெங்கு பெர்மைசூரி

செகிஞ்சான், மே 2

இங்குள்ள நெல் வயல் அழகுனூடே அமைந்துள்ள தெ சிக்ரட் கார்டனில் பேருந்தில் கிராமப்புற சாயலிலான தங்குமிடம் (ஹோம்ஸ்டே) புதிய சுற்றுலா தலமாக மக்களைக் கவர்ந்துள்ளது.

பழைய பேருந்தைப் பயன்படுத்தி இத்தகு தங்குமிடத்தை அமைப்பதைத் தவிர்த்து இதன் உரிமையாளரான லோரென்ஜியஸ் கான் சின்ஷென் செகிஞ்சானில் விவசாய சுற்றுலா திட்டங்களுக்கு பலகைகளைப் பயன்படுத்தி வீடுகளை அமைத்து வருகிறார்.

சிலாங்கூர் சுல்தானின் துணைவியார் தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் இங்கு வருகை புரிந்தது தனது உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகத் தான் கருதுவதாக அவர் சொன்னார்.

"தெங்கு பெர்மைசூரியைக் கண்டவுடன் எனது மனம் மிகவும் படபடப்பாக இருந்தது. இப்பகுதியைச் சுற்றிப் பார்த்த அவருக்கு செகிஞ்சானில் விஷேசமான நத்தை, பெரிய இறால் உணவு வகைகள் பறிமாறப்பட்டன.

" தெ சிக்ரட் கார்டனுக்கு வருகை புரிந்த தெங்கு பெர்மைசூரி மற்றும் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சிலாங்கூர் கினியிடம் அவர் விவரித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.