NATIONAL

இணைய குற்றச்செயல்கள் : வெ. 67.7 மில்லியன் இழப்பு

23 ஏப்ரல் 2019, 4:06 AM
இணைய குற்றச்செயல்கள் : வெ. 67.7 மில்லியன் இழப்பு

லாபுவான், ஏப்.23:

நாடு முழுவதிலும் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 2,207 இணைய குற்றங்கள் புகார் செய்யப்பட்டன. இந்த சைபர் குற்றச்செயல்கள் மூலம் 67.7 மில்லியன் வெள்ளி மோசடி செய்யப்பட்டதாக தொடர்பு பல்லூடக அமைச்சின் துணை தலைமை செயலாளர் ஷாகிப் அகமது ஷாகிர் தெரிவித்தார்.

இவற்றில் தொலைபேசி வாயிலாக மோசடி குற்றங்களாக 773 வழக்குகள் பதிவு செய்யப்பட்டவேளையில் அவற்றின் மூலம் 26.8 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

மேலும், இணைய வழி பொருட்கள் விற்பனை மூலம் 4.2 மில்லியன் வெள்ளியும் ஆப்ரிக்க மோசடி மூலம் 14.9 மில்லியன் வெள்ளியும் இழப்பு ஏற்பட்டதாகவும் ஷாகிப் கூறினார்.

இவற்றோடு இணையம் மூலம் கடனுதவி வழங்கும் மோசடி நடவடிக்கைகள், கடன்பற்று அட்டை மோசடி, அடையாளம் மற்றும் தரவுகள் களவு போன்றவற்றின் மூலம் 21.5 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்ட தகவலையும் அவர் வெளியிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.