SELANGOR

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: சிலாங்கூர் கண்டனம்

22 ஏப்ரல் 2019, 2:08 AM
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்:  சிலாங்கூர் கண்டனம்

 

ஷா ஆலம், ஏப்.22-

வெளிநாட்டவர் உட்பட 160 பேரைப் பலி கொண்ட மனிதாபிமானமற்ற இலங்கை வெடிகுண்டு சம்பவத்தை மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கடுமையாகச் சாடினார்.

“இந்தச் சம்பவத்தில் பலியானவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று அனுதாப செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

கிறுஸ்துவ சமயத்தினர் ஈஸ்டர் தினத்தை அனுசரித்துக் கொண்டிருந்த வேளையில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் சொன்னார்.

உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியளவில் கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் தங்கும் விடுதிகளிலும் குண்டு வெடித்தது அறிந்து உலகமே நேற்று அதிர்ச்சியில் உறைந்தது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.